செய்திகள்
அமைச்சர் கேசி கருப்பணன்

தி.மு.க. வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும் - அமைச்சர் கே.சி.கருப்பணன்

Published On 2020-01-24 21:13 GMT   |   Update On 2020-01-24 21:13 GMT
“தி.மு.க. வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும்” என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மாற்றி ஓட்டு போட்டதால் தி.மு.க. சில இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. சத்தியமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. எனினும் அவர்களால் எந்தவித திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.

தி.மு.க. வெற்றி பெற்று உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படும். அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், ஊராட்சிகளில் தி.மு.க. வெற்றி பெற்றாலும் அவர்களால் எந்த திட்டப்பணிகளையும் முழுமையாக செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது குறித்து வருத்தம் அடைய தேவையில்லை. வருகிற சட்டசபை தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறுவோம்’ என்றார்.
Tags:    

Similar News