செய்திகள்
கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்த காட்சி.

காட்பாடி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2020-01-22 14:58 GMT   |   Update On 2020-01-22 14:58 GMT
காட்பாடி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் திடீரென ஆய்வு செய்தார். அங்குள்ள பிரசவ வார்டுக்கு சென்று கர்ப்பிணிகளிடம் உதவித்தொகை வருகிறதா? என கேட்டறிந்தார்.
வேலூர்:

காட்பாடி அருகே உள்ள வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் இன்று திடீரென ஆய்வு செய்தார். 
அங்குள்ள பிரசவ வார்டில் சென்று கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மகப்பேறு நிதி உதவி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறீர்களா? நிதிஉதவி முறையாக கிடைக்கிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வார்டுவார்டாக சென்று பார்வையிட்டார். அங்குள்ள போர்வெல் சீரமைத்து கூடுதலாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் அதன் அருகே கட்டப்பட்டு வரும் மருத்துவர் குடியிருப்பு கட்டிட பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்து டாக்டரிடம் கேட்டறிந்தார். கலெக்டர் திடீர் ஆய்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News