திராவிடர் கழக நிகழ்ச்சி பற்றி உண்மைக்கு மாறாக பேசியதாக நடிகர் ரஜினிக்கு கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிக்கு கி வீரமணி கண்டனம்
பதிவு: ஜனவரி 19, 2020 22:11
கி வீரமணி
சென்னை:
துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், செருப்பு மாலை போடப்பட்டது” என்று கூறினார். ‘முரசொலி பத்திரிகையை கையில் வைத்திருந்தால் தி.மு.க. கட்சிக்காரர்கள் என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கூறலாம்’ என்று பேசி இருந்தார்.
ரஜினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு தி.மு.க.வினர் ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருகிறேன் என்பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சோவை புகழ்கிறேன் என்று துக்ளக்கில் எழுதாத ஒன்றையும், அச்சிடாத ஒன்று குறித்தும் பேசியுள்ளீர்கள். உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரை பின்பற்றுபவர்களின் மனதைப் புண்படுத்திவிட்டீர். இவ்வாறு பேசத் தூண்டியது யார்? எங்கிருந்து உங்களுக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது. திராவிடர் கழக நிகழ்ச்சி பற்றி உண்மைக்கு மாறாக பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
Related Tags :