செய்திகள்
தற்கொலை

வளசரவாக்கத்தில் தலை முடியை ஒட்ட வெட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை

Published On 2020-01-19 15:58 IST   |   Update On 2020-01-19 15:58:00 IST
சலூன் கடைக்கு தாய் அழைத்து சென்று தலை முடியை ஒட்ட வெட்டியதால் பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்பேடு:

சென்னை வளசரவாக்கம் அடுத்த கைக்காங்குப்பம் வவூசி தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி, இவரது மகன் சீனிவாசன். குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தான். சீனிவாசன் தலையில் நிறைய முடி வைத்துக் கொண்டு ஸ்டைலாக பள்ளிக்கு சென்று வந்தான். இதை அவனது தாய் மோகனா கண்டித்தார்.

நேற்று மாலை சீனிவாசனை சலூன் கடைக்கு அழைத்து சென்ற மோகனா ஸ்டைலாக வளர்த்த முடியை ஒட்ட வெட்டி விட்டார். இதில் மனவேதனை அடைந்த சீனிவாசன் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News