செய்திகள்
அதிமுக

புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி

Published On 2020-01-11 10:28 GMT   |   Update On 2020-01-11 10:28 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயலட்சுமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. இதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 13 வார்டுகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மறைமுகத்தேர்தலில் தி.மு.க. சார்பில் கலைமணி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் ஜெயலட்சுமி நிறுத்தப்பட்டார்.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயலட்சுமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கலைமணி 10 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தி.மு.க. கூட்டணி 13 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்ததால் கலைமணி எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மை இருந்தும் தி.மு.க. தோல்வியடைந்து விட்டது.

தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு அளித்திருக்கலாம் என தெரிகிறது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதால் அதிர்ச்சியடைந்த தி.மு.க. மற்றும் கலைமணியின் ஆதரவாளர்கள் தோல்விக்கு காரணமான 3பேர் யாரென்று கேட்டு உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News