செய்திகள்
ஆர்ப்பாட்டம்

அமைச்சர்- எம்.எல்.ஏ.வை கண்டித்து அரசு வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-01-07 18:44 IST   |   Update On 2020-01-07 18:44:00 IST
அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வை கண்டித்து அரசு வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டையில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது மாவட்ட வட்ட வருவாய் வழங்கல் அதிகாரியை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் கநதர்வக்கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம், நகரச் செயலாளர் பாஸ்கர். ஆகியோர் தரக்குறைவான வார்த்தைகளால் அதிகாரிகளை திட்டியதாக தெரிகிறது. 

இதைகண்டித்து ஆலங்குடி தாலுகா அலுவலக வருவாய்த்துறை பணியாளர்கள் வட்டத்தலைவர் ரவிக்குமார் தலைமையில் அலுவலக வளாக முன்பு கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Similar News