செய்திகள்
மயக்கம் அடைந்த அதிமுக வேட்பாளர்

தேர்தலில் 7 ஓட்டில் தோல்வி - அதிர்ச்சியில் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்தார்

Published On 2020-01-03 11:59 IST   |   Update On 2020-01-03 11:59:00 IST
ஈரோடு மாவட்டம் தாளக்குளம் 3-வது வார்டு ஒன்றிய அதிமுக வேட்பாளர் மணி என்கிற ராமலிங்கம் 7 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தகவல் அறிந்ததும் மயங்கி விழுந்தார்.
பவானி:

பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது அந்த பகுதியில் அனைத்து கட்சி பிரமுகர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. இங்கு வாக்கு எண்ணும்போது சிறு குளறுபடி ஆனது. இதனால் அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த நிலையில் தாளக்குளம் 3-வது வார்டு ஒன்றிய அதிமுக வேட்பாளர் மணி என்கிற ராமலிங்கம் இதில் 7 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் ராமலிங்கம் அதிர்ச்சி அடைந்து மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.




Similar News