செய்திகள்
அபராதம்

மருத்துவ கழிவில் டெங்கு கொசு- தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Published On 2019-12-30 07:41 GMT   |   Update On 2019-12-30 07:41 GMT
மருத்துவ கழிவில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆலந்தூர்:

ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தனியார் நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், வீடுகளில் சுகாதார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மண்டல நல அலுவலர் மல்லிகா, சுகாதார அலுவலர் கண்ணன், ஆய்வாளர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள், குப்பை களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தன. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News