செய்திகள்
விஷம்

வாலிபருடன் சேர்ந்து மது அருந்திய வீடியோ வெளியானதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

Published On 2019-12-28 15:10 IST   |   Update On 2019-12-28 15:10:00 IST
நாகை மாவட்டம் மயிலாடுமுறையில் வாலிபருடன் சேர்ந்து மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் 4 பேர் வாலிபர் ஒருவருடன் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் வாலிபர் ஒருவருடன் சீருடையில் 3 கல்லூரி மாணவிகள் மற்றும் சீருடை இல்லாமல் ஒரு பெண் மது அருந்தும் காட்சிகளும், மேலும் இரண்டு பெண்கள் வந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அந்த மாணவிகள் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் என்று தெரிய வந்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி துறைத்தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் கல்லூரி நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட 4 மாணவிகளை நிரந்தரமாக நீக்கம் செய்வதாக முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மது அருந்திய வீடியோ வெளியாகியதாலும், கல்லூரி நிர்வாகம் நீக்கம் செய்ததாலும் மனமுடைந்த அதில் ஒரு மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மீதான நடவடிக்கை தளர்த்தப்பட்டு அந்த மாணவிகளுக்கு எச்சரிக்கை மட்டும் கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News