செய்திகள்
கைது

மயிலாடுதுறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது

Published On 2019-12-21 10:15 GMT   |   Update On 2019-12-21 10:15 GMT
நாகை மாவட்டம் மயிலாடு துறையில் செல்போன் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை பகுதியில் குறிப்பாக இரவு நேரங்களில் செல்போன் பேசிகொண்டு செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பு சம்பவம் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் மர்ம கும்பலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து நாகை மாவட்ட எஸ்பி.செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை டிஎஸ்பி.அண்ணாதுரை அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மேற்பார்வையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் ஏட்டுகள் நரசிம்ம பாரதி, அசோக், செந்தில், பாலா, தெய்வ சிகாமணி உள்பட போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று இரவு 11 மணியளவில் சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் வழியாக சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தில் செல்போன் பறிப்பு கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 2 பேர் சிக்கினர்.

அவர்கள் கீழமணக்கு வடக்கு தெரு வீரமணி மகன் ராம்குமார் (வயது 22), அகரமணக்குடி துரை மகன் வசந்த் (18), கார்த்தி (20), விவேக் (22), என தெரிய வந்தது.

மேலும் பெண்களிடம் வழிபறி செய்த கீர்த்தி வாசன்(19), கார்த்தி(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்

Tags:    

Similar News