செய்திகள்
தற்கொலை

வேதாரண்யத்தில் வாலிபர் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-12-21 15:10 IST   |   Update On 2019-12-21 15:10:00 IST
வேதாரண்யத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம். கொளப்பாடு, அரண்மனைக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் பார்த்தீபன் (23). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது சிறிது நாட்கள் கழித்து திருமணத்தை பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் மனவேதனையில் இருந்த பார்த்தீபன் வீட்டை விட்டு வெளியேறி வேதாரண்யத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு பார்த்தீபன் தன் கைலியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பார்த்தீபனின் தாயார் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்து போன பார்த்தீபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

Similar News