தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர்,கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமூண்டி என 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி வனச்கரகத்திக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்களை வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் இவரது தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது. காலையில் விவசாயி சக்திவேல் தனது தோட்டத்திக்கு சென்று பார்த்தபோது தனது தென்னை மரங்கள் சேதம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் இரவு நேரத்தில் தனது தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது தெரியவந்தது. சுமார் 15 தென்னை மரங்களை யானை சேதாரபடுத்தியுள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.