செய்திகள்
வேதாரண்யம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் குளப்பாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் ரெங்கநாதன் மகன் பார்த்திபன் (வயது 23). இவர் குளப்பாடு அரண்மனை காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று காலை ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக குளப்பாடு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஜீவானந்தம் வேலைக்கு சென்று விட்டதால் அங்கேயே பார்த்திபன் இருந்துள்ளார்.
இந்நிலையில் இரவு ஜீவானந்தம் வீட்டிற்கு வந்தபோது அங்கு பார்த்திபன் தூக்கு மாட்டி இறந்து கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம் இதுபற்றி வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் பார்த்திபன் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.