சென்னிமலை அருகே விஷம் குடித்து பிழைத்த பெண் தூக்குபோட்டு தற்கொலை
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த தோப்புபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பெயர் ராணி (வயது 34). வீட்டில் இருந்து வந்த ராணி சில நாட்களாகவே மன வேதனையில் இருந்தாராம்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த ராணி தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்து விட்டார்.
வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு வந்தபோது அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்த ராணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமானார். இதனால் வீடு திரும்பினார்.
எனினும் அவர் தொடர்ந்து கவலையிலேயே இருந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து சென்று ராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதில் முடிவாக இருந்த ராணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று உடனடியாக தெரியவில்லை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.