செய்திகள்
கோப்பு படம்

தாம்பரத்தில் அனுமதியின்றி போராட்டம் - 5 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு

Published On 2019-12-18 09:09 GMT   |   Update On 2019-12-18 09:09 GMT
தாம்பரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 5 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தாம்பரம்:

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

தாம்பரம் சண்முக சாலையில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

இதில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.வினரின் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, இதயவர்மன், வரலட்சுமி மதுசூதனன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மீது அனுமதி யின்றி போராட்டத்தில் ஈடுபட்டது, ஒரே இடத்தில் அதிக பேர் கூடியது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News