செய்திகள்
மதுராந்தகத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை காணலாம்

‘ஆன்லைன்’ வர்த்தகத்துக்கு எதிர்ப்பு - மதுராந்தகத்தில் வியாபாரிகள் கடையடைப்பு

Published On 2019-12-17 09:51 GMT   |   Update On 2019-12-17 09:51 GMT
மதுராந்தகத்தில் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்கம் சார்பில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:

ஆன்லைன் வர்த்தகத்துக்கு வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுராந்தகத்தில் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்கம் சார்பில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் முழுவதும் மூடப்பட்டன.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேரடி வீதி, சூனாம்பேடு சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ஆஸ்பத்திரி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார்.

Tags:    

Similar News