செய்திகள்
ஏரி

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 550 ஏரிகள் நிரம்பின

Published On 2019-12-06 07:33 GMT   |   Update On 2019-12-06 07:33 GMT
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றைய கணக்கெடுப்பின்படி, 909 ஏரிகளில் 550 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
காஞ்சிபுரம்:

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 909 ஏரிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன.

இதில் நேற்றைய கணக்கெடுப்பின்படி, 909 ஏரிகளில் 550 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 133 ஏரிகள் 75 சதவீதமும், 120 ஏரிகள் 50 சதவீதமும், 5 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் என சொல்லப்படும் 16 பெரிய ஏரிகளான தையூர், மானாமதி, தென்னேரி, காயார் மணிமங்கலம் ஆகிய ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு தண்ணீர் பிரச்சினை வராது என விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News