செய்திகள்
கம்மாபுரம் அருகே பொதுமக்களை பயமுறுத்திய முதலை பிடிப்பட்டது.

விருத்தாசலம் அருகே பொதுமக்களை பயமுறுத்திய முதலை பிடிபட்டது

Published On 2019-12-03 11:55 GMT   |   Update On 2019-12-03 11:55 GMT
விருத்தாசலம் அருகே ஏரியில் குளிக்க சென்றவர்களை பயமுறுத்திய முதலையை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் உள்ள வண்ணாத்து ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் ஏரியில் குளிக்கச் சென்றவர்கள் முதலையை பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் விருத்தாச்சலம் வனத் துறை ஊழியர்கள் விரைந்து சென்று ஏரியில் முதலை உள்ளதா? என கண்காணித்தனர். ஆனால் முதலை எதுவும் தென் படவில்லை. வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு ஏரியில் முதலை இருப்பதாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள் ஏரிக் கரையிலிருந்து நெல்வயல் பகுதிக்கு ஊர்ந்து சென்ற முதலையை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.

இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதலையை லாவகமாக பிடித்து கயிறால் கட்டி விருத்தாசலம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News