இந்தியா

தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்

Published On 2026-02-03 08:12 IST   |   Update On 2026-02-03 08:12:00 IST
  • சர்வதேச நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
  • மத்திய பட்ஜெட்டில் யூகபேர வணிகம் மீதான பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட், முதலீடுக்கு முன்னுரிமை அளிக்கிறது. நுகர்வை அதிகரிப்பதற்கான முன்னுரிமை கருவியாக முதலீட்டை பார்க்கிறது.

சர்வதேச நிச்சயமற்ற நிலை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு எந்த நாட்டின் நாணயம் மீதும் நம்பிக்கை இல்லாததால், அவர்கள் தங்கம் மீது முதலீடு செய்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. பல்வேறு மத்திய வங்கிகளும் தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றன.

மத்திய பட்ஜெட்டில் யூகபேர வணிகம் மீதான பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்தில் குழந்தைகள் ஏராளமான பணத்தை இழக்கின்றன.

எனவே, மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பெற்றோர் என்னிடம் கேட்டுக்கொண்டனர். எனவே, அந்த வணிகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்துடன் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறையை 4.3 சதவீதமாக குறைக்க பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

பங்கு விற்பனையும், சொத்துகளை பணமாக்குவதும் நீடிக்கும். பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விற்பனையை மத்திய அரசு ஊக்குவிக்கும். ஐ.டி.பி.ஐ. வங்கி பங்கு விற்பனைக்கு ஏற்பாடு நடந்து வருகிறது. ஜி.எஸ்.டி. குறைப்பாலும், வருமானவரி விலக்கு அதிகரிப்பாலும் தனிநபர் நுகர்வு அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும் நுகர்வு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News