செய்திகள்
கட்டிடத்தின் மேல் பகுதி பெயர்ந்து இருக்கும் காட்சி.

ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

Published On 2019-11-25 17:33 GMT   |   Update On 2019-11-25 17:33 GMT
கல்லல் அருகே ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கல்லல்:

கல்லலை அடுத்த செம்மனூரில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு காய்ச்சல் தடுப்பு பிரிவு ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு செம்மனூர், கல்லல், கூமாச்சிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

மேலும் இங்கு உள்நோயாளியாகவும், வெளி நோயாளிகளாகவும் தினமும் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் பிரசவம் மற்றும் பொது மருத்துவத்திற்கு தனித்தனியாக கட்டிடங்கள் உள்ளன. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் ஏராளமானவர்கள் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருகின்றனர்.

காய்ச்சலுக்காக தனிபிரிவு ஆரம்பிக்கப்பட்டு, அது ஒரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்பிரிவு கட்டிடத்தில் காய்ச்சலுக்காக சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100 கணக்கான கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் காரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது. மேலும் இந்த சம்பவத்தின் போது அங்கு நோயாளிகள் யாரும் சிகிச்சை பெற வராததால், அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

மேல்பகுதியில் கம்பிகள் வெளியில் தெரியும்படி கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே கட்டிடத்தை சீரமைக்கவும் , நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தகுந்த நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News