செய்திகள்
விபத்து

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- என்ஜினீயர் பலி

Published On 2019-11-03 22:03 IST   |   Update On 2019-11-03 22:03:00 IST
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
படப்பை:

சென்னை சாலி கிராமத்தை சேர்ந்தவர் குகன் (வயது 30). ஜமீன் பல்லாவரம் நடேசன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிஇருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன் (34) என்ஜினீயர்களான இருவரும் துரைப்பகத்தில் உள்ள ஐ.டி.  நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இருவரும் படப்பையை அடுத்த பூந்தண்டலத்தில் உள்ள வீட்டு மனை பிரிவு களை பார்த்து விட்டு மேளத்தூர் வழியாக தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஏறுமையூர் தர்காஸ் அருகே வந்த போது கல்குவாரியில் இருந்து வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.  சம்பவ இடத்தியலேயே குகன் பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த விஸ்வநாதனைஅக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குசெய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான குகனுக்கு வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News