செய்திகள்
கோப்புப்படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28 ஏரிகள் நிரம்பின

Published On 2019-11-01 08:58 GMT   |   Update On 2019-11-01 08:58 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கரூர் ஏரி, வையாவூர், மதுரமங்கலம் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.

பலத்த மழை காரணமாக 28 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கரூர் ஏரி, வையாவூர், மதுரமங்கலம் ஏரி, பழைய சீவரம், வல்லம் சித்தேரி உள்ளிட்ட 28 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியிருக்கின்றன.

இவை தவிர 42 ஏரிகள் 80 சதவீதமும், 103 ஏரிகள் 70 சதவீதமும், 385 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவமாகக் கொண்டு அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 84, உடனடி பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 117 கண்டறியப்பட்டுள்ளன. மிதமான பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் 183, குறைந்த பாதிப்பு ஏற்படுத்தும் இடங்கள் 131 என மொத்தம் 515 இடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

இந்த பகுதிகள் பாதிப்பு அடையாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
Tags:    

Similar News