செய்திகள்
கைது

வேதாரண்யம் அருகே கொத்தனாரை தாக்கி பணம் பறிப்பு - 3 பேர் கைது

Published On 2019-10-21 15:52 IST   |   Update On 2019-10-21 15:52:00 IST
வேதாரண்யம் அருகே கொத்தனாரை தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 30). கொத்தனார்.

இவர் நாகப்பட்டினத்தில் வேலைபார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு வெள்ளப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று உள்ளார். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கட்டையால் அன்பரசனை தாக்கி அவர் வைத்திருந்த 1000 ரூபாயை பறித்து சென்று விட்டனர்.

இதில் காயமடைந்த அன்பரசன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த தகவலையடுத்து வேதாரண்யம் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா உத்தரவின் பேரில் வேட்டைக்காரனிருப்பு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபாஷ்சந்திரபோஸ், சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கவுண்டமணி, மணிகண்டன், விநாயகமூர்த்தி, வீரகுமார் ஆகிய 5 பேர் என்று தெரியவந்தது. அதன் பேரில் ரமேஷ் (26), கவுண்டமணி (29), மணிகண்டன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News