செய்திகள்
நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி

நாகையில் நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-10-18 21:39 IST   |   Update On 2019-10-18 21:39:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

ஊதியக்குழு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம், தனித்துறை ஏற்படுத்த வேண்டும். நியாயவிலை கடைகளுக்கு வழங்கும் பொருட்கள் அனைத்தும் பொட்டலங்களில் அடைத்து வினியோகம் செய்ய வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நாகையை தலைமையிடமாக கொண்டுள்ள நாகை பொதுப்பணியாளர் கூட்டுறவு பண்டகசாலையை மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலையாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர். 

அதன்படி நேற்று நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்செழியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆடியபாதம், பழனிவேல், தியாகராஜன், சீத்தாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரே‌‌ஷ்கண்ணன் வரவேற்றார். இதில் மாநில துணைத்தலைவர் பிரகா‌‌ஷ் கலந்து கொண்டு பேசினார்.

Similar News