செய்திகள்
பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2019-10-01 23:30 IST   |   Update On 2019-10-01 23:30:00 IST
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடத்தப்படுகிறது.
காட்பாடி:

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தென்னக ரெயில்வே பாரத சாரண- சாரணீயர் இயக்கம் சென்னை கோட்ட மத்திய மாவட்டம் சார்பில் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடத்தப்படுகிறது.

காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நந்தகுமார், செந்தமிழரசு ஆகியோர் தலைமையில் 25 மாணவர்கள் சைக்கிளில் காட்பாடியில் இருந்து வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர் வழியாக நாளை (புதன்கிழமை) சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தை அடைகின்றனர்.

நிகழ்ச்சியில் தென்னக ரெயில்வே உதவி கோட்டப் பொறியாளர் அபிஷேக்மிட்டல், ரெயில் நிலைய கண்காணிப்பாளர் ரவீந்திரநாத், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை சகாயராஜ், மணிகண்டன், கணேசன், சுந்தரேசன், மகேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News