செய்திகள்
கோப்பு படம்

ஆதம்பாக்கத்தில் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-09-26 14:55 IST   |   Update On 2019-09-26 14:55:00 IST
ஆதம்பாக்கத்தில் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், இ.பி. காலனியை சேர்ந்தவர் அருண்குமார், இவரது மனைவி வசந்தமலர் (31), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த வசந்தமலர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரில் வசித்து வந்த மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த நியன்தானா ரங்கமை (19) என்பவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News