செய்திகள்
மழை (கோப்புப்படம்)

காஞ்சிபுரத்தில் பரவலாக  மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-09-25 12:31 IST   |   Update On 2019-09-25 12:31:00 IST
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாபாத், மாகரல், பாலு செட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாலாஜாபாத், மாகரல், பாலு செட்டிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொது மக்கள் சிரமம் அடைந்தனர்.

மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 1 மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Similar News