செய்திகள்
தாம்பரம் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
தாம்பரம் அருகே என்ஜினீயர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணி செய்து வருகிறார்.
இவர் குடும்பத்தினருடன் ஜெயங்கொண்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.