செய்திகள்
வடமாநில வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
வடமாநில வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரைக்கன் கான் ( 26) இவர் பழைய பல்லாவரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார் நேற்று பல்லாவரம் பகுதியில் நடைபெறும் சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்கு நடந்து வந்தபோது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பணம் பறித்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தை கைது செய்தனர். அவருடன் கொள்ளையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரியை தேடி வருகின்றனர்