செய்திகள்
விராலிமலை சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவ 108 ஆம்புலன்ஸ் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-09-05 17:32 GMT   |   Update On 2019-09-05 17:32 GMT
விராலிமலை அருகே விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவ 108 ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விராலிமலை:

சென்னையை சேர்ந்தவர் கிருஷ்ணாசங்கர் (வயது 42). இவரது மனைவி மகாமாலினி. இந்த தம்பதியின் மகன் அஸ்வின், மகள் மோகித். இவர்கள் 4 பேரும் சென்னையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகாமாலியின் தாத்தா இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டனர்.

இன்று காலை அவர்கள் விராலிமலை சுங்கச்சாவடியை கடந்து சென்று கொண்டிருந்தனர். காரை கிருஷ்ண சங்கர் ஓட்டினார்.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் இ.மேட்டுப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் மகாமாலினி மற்றும் மகள் மோகித் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.

உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். மேலும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். டோல் பிளாசாவில் தயார் நிலையில் ஆம்புலன்சு வேன் இருந்தும் சம்பவ இடத்திற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த இ.மேட்டுப்பட்டி பொதுமக்கள் டோல் பிளாசாவிற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர். சுங்கச் சாவடியில் கட்டணம் மட்டும் வசூலிக்கிறார்கள். ஆனால் ஆம்புலன்சு, தீயணைப்புத்துறையினர் எந்தவிதமான உதவி கேட்டாலும் செய்து தருவதில்லை. இந்த பிரச்சினையில் விரையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் காயம் அடைந்தவர்கள் வேறு வாகனம் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News