செய்திகள்
போராட்டம்

புதியசாலை பணிகளை விரைந்து முடிக்ககோரி புதுக்கோட்டையில் வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

Published On 2019-09-04 10:42 GMT   |   Update On 2019-09-04 10:42 GMT
புதுக்கோட்டையிலிருந்து போஸ்நகர் வழியாக மணிப் பள்ளம் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையிலிருந்து போஸ்நகர் வழியாக மணிப்பள்ளம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதைக் கண்டித்தும், புதிய தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தியும் கடந்த 17.6.2019 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், சாலையில் பரப்பப்பட்ட சரளைக் கற்களால் வாகனம் ஓட்ட முடியாமலும், அந்தப் பகுதியில் தூசி படர்ந்ததாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத் தொடர்ந்து சாலையை உடனடியாக சீரமைக்ககோரி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின் சார்பில் நேற்று போஸ் நகரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித் தார். நகரச்செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் டேவிட், துணைச் செயலாளர் ஜெகன், சிபிஎம் நகரக்குழு உறுப்பினர் ஆர்.சோலையப்பன், சிஐடியு சார்பில் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

போராட்டத்தைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சண்முக நாதன் தலைமையில், நெடுஞ்சாலை துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சரவணன் முன்னிலையில் பேச்சுவார்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடனடியாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News