செய்திகள்
சுங்கச்சாவடி

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு - இளைஞர் கைது

Published On 2019-08-29 15:32 IST   |   Update On 2019-08-29 16:50:00 IST
மதுரையின் திருமங்கலம் அருகே சுங்கச்சாவடியில் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:

மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இன்று மதியம் காரில் வந்த நபர், சுங்கச்சாவடி கட்டணம் கட்ட மறுத்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சுங்கச்சாவடியில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரை ஊழியர்களே பிடித்து ஒப்படைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Similar News