செய்திகள்
பஸ்

டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 88 பேருக்கு அபராதம்

Published On 2019-08-20 17:41 IST   |   Update On 2019-08-20 17:41:00 IST
ஈரோடு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 88 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு:

அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஒரே சமயத்தில் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஈரோடு மண்டல போக்குவரத்து பொது மேலாளர் மகேந்திரகுமார், வணிக மேலாளர் நாகேந்திரன் மேற்பார்வையில் ஒரே சமயத்தில் பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது.

பஸ்களில் பயணிகள் முறைப்படி பயணச்சீட்டு வாங்கி பயணிக்கிறார்களா? என இந்த சோதனை நடத்தப்பட்டது.

மொத்தம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 88 செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் இந்த சோதனையில் ஈடுப்பட்டனர். ஈரோடு பஸ் நிலையத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 88 பேர் பிடிப்பட்டனர்.அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.7500 அபராதம் வசூலானது.

Similar News