செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து - கார்த்தி சிதம்பரம் உறுதி

Published On 2019-08-16 05:18 GMT   |   Update On 2019-08-16 05:18 GMT
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை:

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி., புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் பாதித்த பகுதிகளில் கடந்த ஆண்டு ஆய்வு நடத்திய அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மரங்கள் சாய்ந்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என்றார்.

ஆனால், சமீபத்தில் அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் நிவாரணம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இது தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் அத்து மீறல்களை கண்டிக்காமல், ஆதரவளித்து நடிகர் ரஜினி காந்த் பேசி வருவது வேதனையாக உள்ளது. அரசியலில் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை, அவரது பேச்சு தெளிவாக்குகிறது.

லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றியது வர வேற்கத்தக்கதாக இருந்தாலும் சிறப்பு அந்தஸ்தில் இருந்து குறைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News