செய்திகள்
விபத்து

சென்னிமலையில் பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலி

Published On 2019-07-29 17:53 IST   |   Update On 2019-07-29 17:53:00 IST
சென்னிமலையில் பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே மேலப்பாளையம் சரவணா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 53) சலவைத் தொழிலாளி.

இவருக்கு பூபதி (வயது 30), கார்த்தி (வயது 25) மற்றும் செந்தில் குமார் (வயது 20) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் செந்தில்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செந்தில் குமார் தனது தந்தைக்கு உதவியாக சலவைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், செந்தில்குமார் நேற்று இரவு வெள்ளோடு ரோட்டில் சென்னிமலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது குமராபுரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பொக்லைன் இயந்திரம் செந்தில் குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செந்தில்குமார் இறந்தார்.

தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News