செய்திகள்
கொள்ளை

ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

Published On 2019-07-26 17:14 IST   |   Update On 2019-07-26 17:14:00 IST
ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் குன்றக்குடி நகரை சேர்ந்தவர் நவீன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். இவர் தனது மனைவியின் வளைகாப்புக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். அப்போது யாரோ சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதேபோல் ஆதம்பாக்கம் ஆண்டாள் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. கட்டிட மேஸ்திரி ஆக இருக்கிறார். வீட்டை பூட்டி சாவியை பூந்தொட்டியின் அடியில் வைத்து விட்டு வெளியே சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. யாரோ அதை கொள்ளையடித்து இருந்தது தெரிய வந்தது. 

ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News