செய்திகள்
அத்திவரதர்

25 நாட்களில் அத்திவரதரை 34 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

Published On 2019-07-26 15:21 IST   |   Update On 2019-07-26 15:21:00 IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 25 நாட்களில் அத்திவரதரை 34 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் தினந்தோறும் சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை இருமடங்காக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்சி 5 பேர் பலியானதை தொடர்ந்து கோவிலில் கூடுதல் பாதுகாப்பு, தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 25 நாட்களில் இதுவரை 34 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளனர்.

விழாவின் 26-வது நாளான இன்று அத்திவரதர் ரோஜா வண்ணநிற பட்டில் பாதாம், ஏலக்காய், வெட்டிவேர் ஆகிவற்றால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பா.ஜனதா தேசிய செயலாளர் இன்று எச்.ராஜா தரிசனம் செய்தார்.

அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். எனினும் காலை 9 மணி நிலவரப்படி இலவச தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திலேயே சாமி தரிசனம் முடித்து திரும்புகின்றனர்.


Similar News