செய்திகள்
போலி மதுபானம் தயாரித்து புதுவைக்கு சப்ளை செய்தவர் கைது
கூவத்தூர் அருகே பண்ணை வீட்டில் போலி மதுபானத்தை தயாரித்து புதுவைக்கு சப்ளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
கூவத்தூரை அடுத்த கீழார் கொல்லை பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் சாராயத்தை பதுக்கி போலி மதுபானம் தயாரித்து பாண்டிச்சேரிக்கு அனுப்பப்பட்டு வருவதாக மதுவிலக்கு அமல் புலனாய்வு பிரிவு விழுப்புரம் சரக இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாமல்லபுரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தேசிகன், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி உள்பட புலனாய்வு பிரிவு போலீசார் பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனையிட்டனர்.
அப்போது அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 கேன்களில் 1,750 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பிரேம்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியபோது மேலும் ஒரு ரகசிய அறையில் போலி மதுபானம் தயாரிப்பது தெரிந்தது.
இதையடுத்து சாராயம் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்கள், பாட்டல்கள், பாண்டிச்சேரி மதுபான வகை ஸ்டிக்கர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பிரேம்குமாரை கூவத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் சென்னை கோபாலபுரத்தை சேர்ந்தவர் என்றும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த செல்வம் மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்ததும், குமார் என்பவர் எரிசாராயம் சப்ளை செய்வதும் தெரிந்தது. அவர்களை போலீசார் தேடுகிறார்கள்.