செய்திகள்
மரணம்

நங்கநல்லூரில் சாமி கும்பிட்ட பெண் தீயில் கருகி பலி

Published On 2019-07-24 14:42 IST   |   Update On 2019-07-24 14:42:00 IST
நங்கநல்லூரில் சாமி கும்பிட்ட பெண் தீயில் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (52). நேற்று மதியம் வீட்டில் சாமி கும்பிட்டார். கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்ட போது அவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார்.

இது குறித்து நங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News