செய்திகள்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன்

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரிக்கை

Published On 2019-07-20 18:23 GMT   |   Update On 2019-07-20 18:23 GMT
சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் மாநில அளவில் எவ்வித ஜல்லிக்கட்டுகளும் நடைபெற அனுமதிக்கக்கூடாது எனவும், அதை மீறி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள் ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 31-ந்தேதிக்கு பின்னர் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு அனுமதி கிடையாது. இதையும் சிலர் மீறி தங்கள் பகுதியில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

எனவே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News