செய்திகள்
செம்மரம்

வாலாஜா டோல்கேட்டில் கண்டெய்னர் லாரியில் கடத்திய 1½ டன் செம்மரம் பறிமுதல்

Published On 2019-07-18 11:20 GMT   |   Update On 2019-07-18 11:20 GMT
வாலாஜா டோல்கேட்டில் பல லட்சம் மதிப்பிலான செம்மரம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜா:

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கம்மாவான் பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் கண்டெய்னர் லாரியில் செம்மர கடத்தப்படுவதாக வாலாஜா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கீதா, வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் வாலாஜா போலீசார் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை டிரைவர் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

லாரியில் இருந்த 3 பேரை பிடித்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டெய்னர் லாரியில் 5 அடி உயரமுள்ள 250 செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செம்மரம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது கடத்தல் கும்பலின் தலைவன் யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News