செய்திகள்
வாக்காளர் பட்டியல் (கோப்புப்படம்)

வேலூர் தொகுதி துணை வாக்காளர் பட்டியல் 22-ந் தேதி வெளியீடு

Published On 2019-07-18 11:19 GMT   |   Update On 2019-07-18 11:19 GMT
வேலூர் தொகுதியில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியல் இந்த மாதம் 22-ந் தேதி வெளியாகிறது.
வேலூர்:

நாடு முழுவதும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில் தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

வேலூரை தவிர மீதமுள்ள பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முடிந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய தொடர்ந்து மனுக்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்டது. அது மட்டுமின்றி ஆன்லைனிலும் மனுக்களை வாக்காளர்கள் பதிவு செய்தனர்.

இந்த நடவடிக்கைகள் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் ஜூலை 10-ந் தேதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து, தகுதியானவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

பெயர் சேர்க்கப்பட்ட பட்டியல் வெளியிடுவது குறித்து அதிகாரிகள் கூறுகையில்:-

வேட்பு மனுத்தாக்கல் இன்று முடிவடைகிறது. அதன்பின்னர் மனுக்கள் மீதான பரிசீலனை 19-ந் தேதியும், மனுக்கள் திரும்ப பெற 22-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். அதேநாளில் துணை வாக்காளர்கள்பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் நடக்கவுள்ள வேலூர் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுபோடலாம் என்றனர்.
Tags:    

Similar News