செய்திகள்
கிணற்றில் குதித்து தற்கொலை

பேரணாம்பட்டு கிணற்றில் குதித்து பெயிண்டர் தற்கொலை

Published On 2019-07-18 16:41 IST   |   Update On 2019-07-18 16:41:00 IST
பேரணாம்பட்டு பஜார் தெருவை சேர்ந்த பெயிண்டர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு பஜார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அஜித்குமார் (வயது 22). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறாயே என கண்டித்துள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் பேரணாம்பட்டு ஏரிக்கரையோரம் உள்ள கிணற்றில் குதித்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் 40 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி இரவு 11 மணிக்கு அஜித்குமாரின் பிணத்தை மீட்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News