செய்திகள்
விபத்தில் தீயில் எரிந்த லாரி

கொடுமுடி அருகே 2 லாரி மோதி தீ பிடித்தது - ஒருவர் கருகி பலி

Published On 2019-07-17 15:41 IST   |   Update On 2019-07-17 15:41:00 IST
கொடுமுடி அருகே 2 லாரிகள் மோதி கொண்ட விபத்தில் தீயில் கருகி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கரூர் ஈரோடு மெயின் ரோட்டில் சாலைப் புதூர் ஒத்தக்கடை இடைப்பட்ட பகுதியில் தார்சாலை போடும் பணி நடைபெற்று வந்தது.

தார் கலவை ஏற்றிய டிப்பர் லாரி முன்னே சென்று கொண்டு இருந்தது அப்போது ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிய லாரியை மோகனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பாஸ்கர் (38) என்பவர் ஓட்டி வந்தார். முன்னேசென்ற டிப்பர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி லாரி தீப்பிடித்து எரிந்தது. லாரி இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பாஸ்கர் வெளியே வர முடியாமல் லாரிக்குள் சிக்கி அலறி துடித்தார்.

அப்போது அருகில் இருந்த பள்ளியில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தகவலறிந்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் ஹைவே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரி இடிபாடுகளில் சிக்கி தீக்காயங்களினால் துடி துடித்த டிரைவர் பாஸ்கரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருத்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஹை வே போலீசார் விபத்துக்குள்ளான லாரி, டிப்பர் லாரியை. அகற்றி போக்குவரத்தினை சரி செய்தனர். மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாஸ்கர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

மேலும் இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News