ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு பகுதியில் நேற்று மாலையில் இருந்து இரவு 8 மணி வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதே போல் பெருந்துறை பவானி, கொடுமுடி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.
மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகப்பட்சமாக 30.6 மி.மீ மழை கொட்டியது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போல் சென்னிமலை பகுதியில் 27.6 மி.மீ மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெப்பம் தணிந்தது. குளிர்ச்சியான நிலை நிலவியது.
பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.