செய்திகள்
அமைச்சர் அன்பழகன்

அரசு கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்- அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு

Published On 2019-07-02 16:33 IST   |   Update On 2019-07-02 16:33:00 IST
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் அறிவித்தார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று உயர்கல்வித் துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டு பேசினார்.  அப்போது, தமிழகத்தில் அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும்,
கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் நெல்லையில் ரூ.1 கோடி செலவில் இந்த கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

“அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 100 பட்டயப்படிப்பு மாணவர்களின் திறனை உலகளாவிய அளவில் மேம்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சித் திட்டம் 1.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்” என்றும் அமைச்சர் அன்பழகன் அறிவித்தார்.

Similar News