செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சோழவரம் அருகே நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

Published On 2019-07-01 14:45 IST   |   Update On 2019-07-01 14:45:00 IST
சோழவரம் அருகே நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

செங்குன்றம்:

சோழவரம் அருகேயுள்ள அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கொக்குமேடு கிராமம் உள்ளது.

இங்கு 20-க்கும் மேற்பட்ட தனியார்கள் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் திருடி டேங்கர் லாரி மூலம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் அருமந்தை பகுதியில் நிலத்தடி நீர் கிடைக்காமல் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ராட்சத ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

ஆனால் அதன் மீது நடவடிக்கை எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் அருமந்தை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்டம் காரணமாக அருமந்தை- செங்குன்றம், அருமந்தை-மணலி உள்ளிட்ட பகுதிகளுககு வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து தடை ஏற்பட்டது.

உடனே சோழவரம் போலீசாரும், அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Similar News