செய்திகள்
வீடு புகுந்து நகை கொள்ளை

அயனாவரத்தில் டாக்டர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

Published On 2019-07-01 14:30 IST   |   Update On 2019-07-01 14:30:00 IST
அயனாவரத்தில் டாக்டர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்:

அயனாவரம், பில்கிங்டன் சாலையில் உள்ள ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் குமார். பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலைபார்த்து வருகிறார்.

கடந்த 27-ந்தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஒடிசா மாநிலத்திற்கு சென்றார். நாளை காலை அவர் சென்னை திரும்ப முடிவு செய்து இருந்தார். இதற்காக வீட்டை சுத்தம் செய்து வைக்க கோரி அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்ராவ் என்பவரிடம் தெரிவித்தார்.

அவர் குமாரின் வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பீரோவில் இருந்த 70 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

நொளம்பூர் எஸ்.பி. கார்டன் பகுதியில் வினோத் குமார் என்பவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 பவுன் நகை கொள்ளை போனது. இதே போல் அருகில் உள்ள சிவக்குமார் வீட்டிலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள், 10 பவுன் நகையை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.

இதுகுறித்து நொளம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையில் ஈடுபட்டவர்கள் திருவேற்காடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளையர்கள் 2 பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராக்கேஷ், ரிச்சு என்பது தெரிந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News