செய்திகள்

மானாமதுரை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2019-06-17 18:10 GMT   |   Update On 2019-06-17 18:10 GMT
மானாமதுரை அரசு மருத்துவமனையில் நேற்று நாகராஜன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
மானாமதுரை:

மானாமதுரை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் பலவித பிரச்சினைகள் இருப்பதால் சிகிச்சை அளிப்பதில் பின்னடைவு ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டார். அப்போது அரசு மருத்துவமனையில் டாக்டர் குறைவு, சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை, மயக்க மருந்து செலுத்தும் டாக்டர் ஆகியோர் இல்லாமல் இருப்பது போன்ற பல வித பிரச்சினைகளால் சிகிச்சைக்கு வருபவர்கள் அவதியடைந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், அரசு மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து புகார் வந்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். அதில் அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர், நர்சுகள், ஊழியர்கள் ஆகியோரிடமும் மருத்துவமனையின் நிலை குறித்து கேட்டேன்.

முதல்-அமைச்சர் மானாமதுரை தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஒரு ஆய்வு அறிக்கையை கொண்டுவர என்னிடம் கூறியுள்ளார். அதன்படி நான் தொகுதியின் பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சரை சந்திக்க செல்கின்றேன் என்றார்.

ஆய்வின் போது முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் யூனியன் சேர்மன் மாரிமுத்து மற்றும் கட்சியினர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News