செய்திகள்

திருப்பூரில் உள்ள விடுதியில் வெளியூர் நபர்களை தங்க வைக்ககூடாது - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

Published On 2019-05-22 16:00 GMT   |   Update On 2019-05-22 16:00 GMT
திருப்பூரில் உள்ள விடுதி, திருமண மண்டபங்களில் வெளியூர் நபர்களை தங்க வைக்ககூடாது என போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை திருப்பூரில் நாளை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது கட்சி, சாதி, மத ரீதியாக வெளியூர் நபர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அவர்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்குவதற்காக வரலாம். எனவே தங்கும் விடுதி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம்.

சந்தேகப்படும்படி யாராவது தங்கியிருந்தால் காவல் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணுக்கும், திருப்பூர் மாவட்ட போலீஸ் தனிப்பிரிவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News